ஜெனிவா விவகாரத்தை கையாள்வதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு
geneva
tna
conflic
By Vanan
ஜெனிவா விவகாரத்தை கையாள்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து அதில் அங்கம் வகிக்கும் சிலர் அதிருப்தியில் உள்ளமை தெரியவந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி மேற்கொண்ட சில நடவடிக்கைகளினால் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஐ.பி.சி. தமிழுக்கு தெரிவித்தார்.
இதனால் தனது தலைமையில் சில உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஜெனிவாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்ப திட்டமிட்ட போதிலும் அது கைவிடப்பட்டதாக அவர் கூறினார்