கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்! யாழ் - சாவகச்சேரியில் திடீர் சுற்றிவளைப்பு
srilanka
police
arrested
chavakacheri
By Vasanth
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பெருமளவு கோடா மற்றும் கசிப்பு என்பன மீட்டப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கொடிகாமம், கெற்பொலிப் பகுதியில் மதுவரி உதவி ஆணையாளர் பிரபாத் ஜெயவிக்கிரமவின் ஆலோசனைக்கமைய மதுவரிஅத்தியட்சகர் தங்கராசாவின் வழிநடத்தலில் சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையிலான குழுவினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது 700 லீட்டர் கோடா, ஆறு லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.