யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்துக்கும் (Jaffna) திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை (இண்டிகோ) எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானப் பயணத்தின் அட்டவணைப்படி, மதியம் 13.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் 14.25 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும்.
மீண்டும் மாலை 15.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 16.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்தைச் சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை
யாழ்ப்பாணம் - திருச்சி (Tiruchirappalli) விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை தொடர்பான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோன்று, காங்கேசன்துறையிலிருந்து (KKS) நாகபட்டினம் செல்வதற்கான கப்பல் சேவை அவ்வப்போது இடையில் நிறுத்தப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது.
பயணிகளை ஏற்றும் வசதிகள் இல்லை
நாகபட்டினத்தில் இருந்து வருகை தருகின்ற பயணிகளுக்கான வசதிகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஆனால் இங்கு பயணிகளை ஏற்றும் வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அதனை நவீனமயப்படுத்தி பயணிகள் முனையத்தை புனரமைக்க வேண்டும். பயணிகளுக்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் ஒலுவில் துறைமுகம் ஆரம்பத்தில் வர்த்தகத்துறை சார்ந்த துறைமுகமாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அந்தப் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் திறப்பது என்பது கடல் அரிப்புக்கு வழிகோலும் என்னும் அச்சம் மக்களிடம் காணப்படுவதால் அந்த அச்சத்தைப் போக்குவதற்கான திட்டம் ஒன்றை வகுத்து அந்தத் துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்