தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள் - இன்று ஆரம்பமாகும் அகழ்வு
Sri Lanka Police
Sri Lankan Tamils
Tamils
Jaffna
chemmani mass graves jaffna
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவிருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்தன.
குறித்த அகழ்வு பணிகளே இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழிகளில் முதல் கட்டமாக 9 நாளும் இரண்டாம் கட்டத்தில் 45 நாள் அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு இதுவரை 32 நாளும் என மொத்தமாக 41 நாள் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 140 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்