சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் விசாரணைகள்
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் நேற்று (21) முதல் காவல்துறையினரிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 16ஆம் நாள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றைய அகழ்வின் போது, மேலும் 07 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
மீட்கப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதிகள்
நேற்றைய 16ஆம் நாள் ஆகழ்வின் போது முதலாவது புதைகுழியில் 4 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டாவது புதைகுழியில் 3 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏற்கனவே குறித்த பகுதியிலிருந்து 65 என்புக்கூட்டுத் தொகுதிகள், இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 17ஆவது நாளாக அகழ்வுப்பணி இன்றையதினம் (22) முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
