யாழில் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி..! வலுக்கும் கண்டனம்

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka chemmani mass graves jaffna
By Thulsi Oct 10, 2025 01:39 AM GMT
Report

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரதுரமான இனப்படுகொலைக்கான சாட்சியங்களை வரலாற்றாக்கும் வகையில் அமையப்பெற்ற நினைவு இடங்களை நாம் பாதுகாப்பது அவசியம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

அவற்றை பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணியில் அமையப் பெற்ற அணையா விளக்கு நினைவு தூபி உடைக்கப்பட்ட நிலையில் அதனை மீளமைக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு நல்கிய நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் அடித்து நொருக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

செம்மணியில் அடித்து நொருக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

அணையா விளக்கு போராட்டம் 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செம்மணி என்பது தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வளவு தூரம் உள்நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச அளவில் ஆதாரப்படுத்தி நிற்கின்றது.

யாழில் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி..! வலுக்கும் கண்டனம் | Chemmani Mass Graves Memorial Damaged In Jaffna

அணையா விளக்கு போராட்டம் இடம்பெற்ற இடம் மற்றும் இவ் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள பகுதி என்பன யாழ் குடாநாட்டை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்னர் அரச படைகளால் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமியின் உடலம் மற்றும் பிள்ளையை தேடிச்சென்ற பெற்றோர் அயலவர் என நீதி கேட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட பகுதி ஆகும்.

இவ்விடத்திலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வேல்கரும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் மீது வடக்குக் கிழக்கில் அரசினால் கட்டவீழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் பல இடங்களில் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டு விட்டன.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

அரச பயங்கரவாதம்

மேலும் சில இடங்கள் தனிநபர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது தமிழ் மக்களுக்கு அரச பயங்கரவாதத்தினால் எதுவுமே நடக்கவில்லை என சொல்வதற்கான உத்திகளே நடைபெறுகின்றன.

யாழில் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி..! வலுக்கும் கண்டனம் | Chemmani Mass Graves Memorial Damaged In Jaffna

இவற்றில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும.

எமக்கெதிரான அடக்குமுறைகளை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி..! வலுக்கும் கண்டனம் | Chemmani Mass Graves Memorial Damaged In Jaffna

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம்: விளக்கம் வழங்கிய அரசாங்கம்

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம்: விளக்கம் வழங்கிய அரசாங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025