அறியப்படாத இடங்கள் - ஆதாரங்கள்! அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகும் செம்மணி
யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து தற்போது, இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மோசமான குற்றவியல் நீதி அமைப்புக்கான ஆதாரங்களை தற்போது வெளிவருகிறது.
அவை காலத்தின் மண்ணில் புதைந்து கிடந்த நீதிக்கான சாட்சியங்களாக வெளிவருகிறது. நீண்ட காலமாக சிறிலங்கா அரசாங்கம் புதைக்க விரும்பிய சங்கடமான உண்மைகளை அதன் கல்லறைகளுக்குள் இருந்து தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
தமிழர்களின் மையப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் இருந்து மீண்டும் ஒரு கூட்டுப் புதைகுழி தோன்றுவதற்கான சான்றாக, உலகம் இலங்கையை கூர்ந்து கவனிக்கிறது.
செம்மணி அறியப்பட்ட கூட்டுப் புதைகுழிகளில் ஒன்றாகும், மேலும் 26 ஆண்டுகால யுத்தம் இன்னும் அறியப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத பிற இடங்களுக்கு இது வழிவகுக்கலாம்.
இந்நிலையில் போரின் வேதனையான மரபைத் தாங்கி, இந்த கூட்டுப் புதைகுழிகள் பல ஆண்டுகால மோதல்களின் போது கொல்லப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட மக்களின் ஆதாரங்கள் எவ்வாறான நகர்வை எதிர்வரும் காலங்களில் கொண்டுவரபோகின்றது என்பதை விளக்குகிறது தொடரும் காணொளி...
