மாரடைப்பிற்கு முன்னரான அறிகுறிகள்
Heart Attack
By Sumithiran
இடதுபக்க நெஞ்சுவலி என்றதும் “மாரடைப்பு”(heart attack) என்ற எண்ணம் பலருக்கும் முதலாவதாக வந்து விடுகிறது. சிறிய வலியாலேயே நாம் அச்சம் கொண்டு விடுவோம். ஆனால், அந்த இடத்தில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.
இதய நோய் மட்டுமல்ல; நுரையீரல் குறைபாடுகள், ஜீரண கோளாறுகள், விலா எலும்பு பிரச்சினைகள், மன அழுத்தம், அதிக வாயு, ஆஸ்துமா, நிமோனியா ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
இதயம் சம்பந்தப்பட்ட வலி
இதயம் சம்பந்தப்பட்ட வலி என்றால், இடது தோள்பட்டை, கை, விரல்கள் வரை வலி பரவலாம். வியர்வை அதிகமாக வரும், மூச்சுத் திணறல், வாந்தி போல தோன்றும், இதயத்துடிப்பு வேகமாகும்.
மருத்துவமனைக்கு செல்லுங்கள்
நெஞ்சை சுற்றி சுமை கட்டி வைத்திருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும். இவை போன்று ஒரே நேரத்தில் பல அறிகுறிகள் தோன்றினால், காலத்தை வீணாக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கே செல்ல வேண்டும் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்