மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: கோழி இறைச்சியின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
Sri Lanka
Festival
Economy of Sri Lanka
Egg
By Sathangani
a year ago
இலங்கையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த விலை குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
35- 40 ரூபாவிற்கு முட்டை விற்பனையாகும்
இதேவேளை, வற் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்நிலை மாறலாம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புகின்றனர்.
இதனால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
