கோழி இறைச்சி தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டில் கோழி இறைச்சிக்கு அதிக தேவை ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை, இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர கூறியுள்ளார்.
அத்துடன், பன்றி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக கோழி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோரின் குற்றச்சாட்டு
எனினும், சில கோழிப்பண்ணை உரிமையாளர்கள் விலையை அதிகரிப்பதற்காகக் கோழி இறைச்சியைக் குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே கோழி இறைச்சியின் விலை ஆயிரம் ரூபாவில் இருந்து படிப்படியாக அதிகரித்து சென்றுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |