மீண்டும் அதிகரிக்கவுள்ள கோழி இறைச்சியின் விலை! வெளியான தகவல்
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
இறைச்சியின் விலைகள்
இலங்கையில் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரம், நீர்க்கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு இனிவரும் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பாக நாளையதினம் இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசு தலையிட்டால், கோழி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும், எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
