அரசியல்வாதிகளின் முகத்திரையை அரச தலைவர் முன்னிலையில் கிழித்த காவல்துறை மா அதிபர்
அண்மைய நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றமைக்கு காவல்துறை மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அரச தலைவர் முன்னிலையில் காவல்துறை மா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு காவல்துறை பிரிவுக்கும் அந்தந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கின் பேரிலேயே காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன குறிப்பிடுகின்றார்.
அரச தலைவர் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
