13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சிறுமியின் மாமா!
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயது பாடசலை சிறுமியினை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய ஒருவர் கைதாகியுள்ளார்.
தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமியின் மாமனின் மனைவி வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாமன் குறித்த சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் மாதம் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமன் தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
மருத்துவ பரிசோதனை

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த அநீதியினை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி வன்புணர்விற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு காவல்துறையினர் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளார்கள்.
20 வயதுடைய யுவதியும்

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
அதேவேளை, குறித்த குடும்பஸ்தர் சிறுமியின் அக்கா முறையான 20 வயதுடைய யுவதியுடனும் பாலியல் வன்புணர்வின் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.