வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி - பலியான பச்சிளம் குழந்தை
இராகலை – சென் லெணாட்ஸ் தோட்டத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்த்தில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
சென் லெணாட்ஸ் தோட்டத்தை சேர்ந்த (14) வயதுடைய சிறுவன் வீட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் தனது சகோதரனான இரண்டரை வயது குழந்தையை ஏற்றிக்கொண்டு முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளளார்.
இதன்போது முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி கவ்வாத்து செய்யப்பட்ட தேயிலை மலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
14 வயது சிறுவன் கைது
இதன்போது முச்சக்கர வண்டியிலிருந்து தேயிலை மலையில் வீசுப்பட்டு வீழ்ந்த குழந்தை பலத்த காயங்ளுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக இராகலை காவல்துயைளினர் தெரிவித்துள்ளனர்.
அத்ததுடன் இச் சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியை செலுத்திய 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்துள்ள குழந்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இராகலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
