ரணிலுக்கான பிணை: அநுர தரப்பின் சட்டத்தரணிகள் விடுத்த எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் சங்கம் இன்று (24) சிறப்பு ஊடக சந்திப்பை நடத்தி அதனை தெரிவித்துள்ளது.
அதன்போது, ரணில் விக்ரமசிங்கவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவை விமர்சிப்பது, அவருக்கு பிணை வழங்கப்படாமல் இருக்க காரணமாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
அதன்படி, நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த உத்தரவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகிவிடும் என்று திசைக்காட்டி சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறனாதொரு பின்னணியில், அரச நிதி முறைக்கேடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இன்று அனைத்து எதிர் தரப்புகளும் ஒன்று கூடியிருந்த நிலையில், அதில் கலந்து கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 8 மணி நேரம் முன்
