யாழ்ப்பாணத்தில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
death
Jaffna
Child
By Vanan
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குறித்த குழந்தை, காலை 6 மணியளவில் திடீரென மூச்சடங்கி காணப்பட்டது.
உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
இறப்பு விசாரணையை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி