பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை : கல்வியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில் பிறப்புவீதம் குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கை சுமார் நாற்பதாயிரம் குறைந்துள்ளது.
பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
பிள்ளைகளின் எண்ணிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கல்வி அமைச்சின் தரவுகளை ஆராயும் போது அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதைதெளிவாகக் காணமுடிகிறது.
கல்வி அமைச்சின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 304105 ஆகும்.
2022 ஆம் ஆண்டில்,முதலாம் தரத்திற்குச் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11,889 குறைந்து 292,216 ஆக இருந்தது.
கருத்தடை அறுவை சிகிச்சை
இதேவேளை குடும்ப சுகாதார பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில், இலங்கையில் 258,235 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர் .இதில் 30719 பேர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
இந்த தரவுகளின்படி, மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர அறிக்கைகளின்படி, புதிதாக திருமணமான தம்பதிகள் கூட குழந்தைகளைப் பெறுவதில் ஆர்வமில்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணத்தினால் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கை குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |