டிக் டாக் செயலி தொடர்பில் வெளிநாடொன்று எடுக்கப்போகும் முடிவு
கென்யா நாடானது டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் டிக்டாக் மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து டிக்டாக் பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்படும் அபாயம்
சீன நிறுவனமான ByteDance, அதன் நாட்டின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுடன் இணங்குவது குறித்து கென்யாவின் உயர் அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, கென்யாவில் ரிக்டொக் அப்ளிகேஷன்களுக்கு தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கென்யா அதிகாரிகள் அதை பரிசீலித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு
தரவு தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் கூட டிக்டாக் தடை பற்றிய பேச்சு உள்ளது.
மேலும், செனகல் மற்றும் சோமாலியாவில் ஏற்கனவே டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |