கிளிநொச்சியில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு: பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் பண்ணையாளர்கள்
வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வெண் ஈ தாக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தென்னை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி,பழைய வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவரது தென்னந் தோப்பு வெண் ஈ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது வீட்டில் உள்ள பயன் தரும் வாழை, பூ மரங்கள், தோடை, எலுமிச்சையும் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக பண்ணையாளர் தெரிவிக்கின்றார்.
வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு
வெண் ஈ தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதால் தரையில் வரும் புற்களில் கூட பரவி சுவாசிக்ககூட முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் நேரில் பார்வையிட்டு தமக்குரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கூறினார்.
தண்ணீர் மாசடைவு
மேலும் இவ்வெண் ஈ தாக்கத்தின் காரணமாக தண்ணீர் மாசடைந்துள்ளதாகவும், அதனை பயன்படுத்துவதால் நோய்த்தாக்கம் ஏற்படலாம் என அச்சமும் வெளியிடுகின்றார்.
தமது கிணற்றில் உள்ள தண்ணீரை பலர் நாளாந்த தேவைக்காக பயன்படுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |