இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! 12 பேர் வைத்தியசாலையில்
COVID-19
Dengue Prevalence in Sri Lanka
By Vanan
குழந்தைகளை பாதிக்கும் கொரோனா
கொரோனா தொற்று உறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதுவரை வைத்தியசாலையில் 12 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

டெங்கும் தீவிரம்

அத்தோடு, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, டெங்கு நுளம்புகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமை என அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி