அவுஸ்ரேலியாவில் நிகழ்ந்த துயரம் - பரிதாபகரமாக பலியான பச்சிளம் மாணவர்கள்
அவுஸ்ரேலியாவின் தாஸ்மேனியாவில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து மாணவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
பாடசாலையின் ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தின் போது காற்று நிரப்பப்பட்ட விளையாட்டு உபகரணமொன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
காலை 10 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் ஊதப்பட்ட விளையாட்டு உபகரணம் தன் கட்டுப்பாட்டை இழந்து 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இவ்வாறு விழுந்த உபகரணத்தில் அந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ,மதியம் 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் , நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் மற்றொரு குழந்தை இறந்துவிட்டதாக பொலிசார் இன்று மாலை உறுதிப்படுத்தினர்.