வடக்கில் பார்வை இழந்த சிறுவர்கள் :காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர்
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால் அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பு சிறுவர்களின் கண்களை பாதித்துள்ளமையால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் நால்வர் முற்றாக பார்வையை இழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று நடத்திய ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவற்றை செய்யவேண்டாம்
மயிர்க்கொட்டி தாக்கம் காரணமாக கண்கள் பாதிக்கப்படுகின்றது.அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு அவர் தெரிவித்தார்.

அத்துடன் கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம் எனவும் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |