தலாவ பேருந்து விபத்தில் பலியான பாடசாலை மாணவன்! 40 பேர் படுகாயம்
புதிய இணைப்பு
தலாவ பேருந்து விபத்தில் இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும், காயமடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அதன்படி, காயமடைந்தவர்களுள் இன்றைய தினம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பேருந்தில் 40க்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



