சீன விவகாரம் - ஏற்றுக் கொண்டால் சிறிலங்காவிற்கு மரண அடியாக மாறும்: பகிரங்க எச்சரிக்கை
"சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்தை இலங்கையிலுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரச நிறுவனமொன்று நிராகரித்துள்ள நிலையில், அவ்வாறு ஏற்றால் அது சிறிலங்காவின் இறையாண்மைக்கும் மரண அடியாக அமையும் என்று சர்வதேச இராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக இலங்கையிலுள்ள அரச நிறுவனம் (தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம்) ஆய்வுமூலம் அறிவித்துள்ளது.
ஒரு தடவைகள் அல்ல இரண்டு தடவைகளுமே நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த அரச நிறுவனத்தில் கற்றவர்களே இருக்கின்றனர். எனினும், இலங்கை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவை ஏற்கமுடியாது எனவும், சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாம் தரப்பிடம், உரமாதிரிகளை வழங்கி மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
சீன நிறுவனத்தின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கும் பட்சத்தில் அது பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். இலங்கையின் நீதி கட்டமைப்பு மீது நம்பிக்கை இல்லை, எனவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாம் தரப்பு ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டால் என்ன செய்வது?
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,