தலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா - உற்று நோக்கும் உலக நாடுகள்!

United States of America Pakistan China Afghanistan Taliban
By Dharu May 08, 2023 07:57 AM GMT
Report

ஆப்கான் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

சுமார் 20 ஆண்டுகளாக அங்கே அமெரிக்கப் படைகள் இருந்த நிலையில், மக்களாட்சி அங்கு இடம்பெற்று வந்தது.

மீண்டும் தாலிபான்

தலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா - உற்று நோக்கும் உலக நாடுகள்! | China Agreement With Along Taliban Pakistan

அமெரிக்கப் படைகள் கடந்த 2021இல் ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்தது.

வெறும் சில வாரங்களில் அவர்கள் ஒட்டுமொத்த ஆப்கானையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

தாலிபான்கள் ஆட்சியில் மீண்டும் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் அங்கே வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளன.

பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை அப்படியே நிறுத்திவிட்டன. இதன் காரணமாக இப்போது பொருளாதார ரீதியில் ஆப்கன் திணறி வருகிறது.

உலக நாடுகளின் முதலீடு தேவை என்ற நிலையே அங்கு உருவாகியுள்ளது.

Belt and Road முயற்சி

தலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா - உற்று நோக்கும் உலக நாடுகள்! | China Agreement With Along Taliban Pakistan

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா ''Belt and Road" முயற்சியை எடுத்துள்ள நிலையில், அதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆப்கான் பொருளாதாரத் தடைகளால் சிக்கித் தவிக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்கள் அவர்களுக்குப் பெரியளவில் உதவும் என கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத் சென்றிருந்த சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரியை சந்தித்தார்.

அப்போது ஆப்கானில் மறுசீரமைப்பு செயல்பாட்டிற்கு உதவும் வகையில், $60 பில்லியன் டொலர் மதிப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன் பிறகு இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடரவும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சீன திட்டம்

தலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா - உற்று நோக்கும் உலக நாடுகள்! | China Agreement With Along Taliban Pakistan

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜி ஜின்பிங் அரசு அங்கே Belt and Road முயற்சியை எடுத்தது. இருப்பினும், அப்போது அங்கு இருந்த ஆப்கான் அரசு அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டியதால் இந்தத் திட்டம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போது கடும் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், சீன திட்டத்திற்குத் தாலிபான்கள் உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது ஆப்கான் தூதரும் உடன் இருந்தார்.

சீனாவின் முதலீடு என்பது ஆப்கான் நாட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வடக்கு அமு தர்யா படுகையில் இருந்து எண்ணெய் எடுக்கச் "சீனா நேஷனல் பெட்ரோலிய" துணை நிறுவனத்துடன் ஆப்கான் அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

மேலும், வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கான் நாட்டிற்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகள் இப்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அதை விடுவிக்க வேண்டும் என்றும் சீன மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்கா

தலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா - உற்று நோக்கும் உலக நாடுகள்! | China Agreement With Along Taliban Pakistan

பயங்கரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்துவார்களோ என்ற அச்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கான் மத்திய வங்கியின் சுமார் 9 பில்லியன் டொலரும் முடக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆப்கன் பொருளாதாரத்தை மேம்படுத்த இதில் பாதி தொகையை அளிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்களுக்குத் தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

இப்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் அவர்களுக்கு எதிராகவே உள்ளது.

இந்தச் சூழலில் இப்போது ஆப்கானுடன் சீனா கைகோர்த்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016