ஸ்ரீலங்கா போன்று சீனாவிடம் சிக்க மாட்டோம்! பங்களாதேஷ் இறுமாப்பு
ஸ்ரீலங்கா சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளது. நாங்கள் சீனாவின் அப்பொறிக்குள் சிக்காது விடயங்களை முறையாக கையாள்வோம் என பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்நாட்டு பத்திரிகை ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகள் தற்போது சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணிய நேரிட்டுள்ளதாக பங்களாதேஷ் பிரதமரின் ஆலோசகர் கூறியுள்ளார்.
அத்துடன் சீனாவுடன் செயற்படும் போது மிகவும் கவனத்துடன் செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா போன்று கஷ்டத்தில் விழாது கவனமாக செயற்பட்டு வருவதாகவும்,
ஸ்ரீலங்கா, சீனாவுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும் போது பெரும் கஷ்டத்தில் விழுந்த விதத்தை நன்றாக புரிந்துகொண்டு, அதில் பாடத்தை கற்று பங்களாதேஷ் அரசாங்கம் மிகவும் கவனமாக சீனாவுடன் கொடுக்கல், வாங்கல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.