கொவிட் புதிய அலை -கையை விரித்த சீன சுகாதார அதிகாரிகள்
corona
china
Health officials
By Sumithiran
சீனா முழுவதும் தற்போது பரவத் தொடங்கியுள்ள புதிய கொரோனா அலையை கட்டுப்படுத்துவது கடினம் என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சீனாவின் 31 மாகாணங்களில் 19 மாகாணங்களில் 'கொவிட் 19' என்ற புதிய அலை பரவியுள்ளது.
'டெல்டா' மற்றும் 'டெல்டா பிளஸ்' வகைகளால் புதிய அலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கொவிட் 19 வைரஸ் 2019 இல் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானில் தோன்றி தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.