மீண்டு தலை தூக்கியது கொரோனா -அவசரகாலநிலைக்குள் வந்தது சீன தலைநகர்
#China #Covid-19 #People
By Vasanth
சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பீஜிங்கில் மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பீஜிங் தற்போது அவசரகாலநிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புள்ள பகுதிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. சீனாவில் விடுமுறைக் காலம் தொடங்கியுள்ளதாலும், கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாலும் அதிகாரிகள் அச்சத்தில் இருக்கின்றனர்.
ஜனவரி 1ஆம் திகதி வரை அரசு ஊழியர்கள் நகரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. மக்கள் தேவையின்றி பயணிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி