இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு நன்கொடை (படங்கள்)
இலங்கை மாணவர்களுக்கு சீனாவால் வழங்கப்பட்ட 1,000 மெட்ரிக் தொன் (100,000 பொதிகள்) அரிசி நேற்று (27) இரவு கொழும்பு துறைமுகத்தை (CICT) வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி அரிசியை இறக்கும் பணி இன்றுடன் நிறைவடையும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
8,000 மெட்ரிக்தொன் அரிசி நன்கொடை
We walk the talk.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) November 28, 2022
1,000 metric tonnes (100,000 packs) rice donated by #China to #SriLankan students have arrived at the CICT, Colombo Port on Sunday (27) night. Unloading completed today.
Since June, a total of 8,000 MT of ?? rice donation have been handed over to ???? pic.twitter.com/frNPR96Gh6
ஜூன் மாதம் முதல், சீனாவில் இருந்து 8,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக டீசலை வழங்குவதற்கும் சீனா உதவி புரிந்து்ளது.இதன்படி டீசலை ஏற்றிய கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.