தைவானிலிருந்து வெளியேறியுள்ள சீன இராணுவம்..
தைவானைச்(Taiwan) சுற்றி சீன இராணுவம் ஆரம்பித்திருந்த போர் பயிற்சியானது தற்போது நிறைவடைந்துள்ளது.
தைவான் சீனாவின்(China) ஒரு பகுதியாக மாறும் வரை, அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி சீன இராணுவம் போர் பயிற்சிகளை ஆரம்பித்தது. தைவானுக்கான தண்டனையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சியில் சீனாவின் முப்படைகளும் பங்கேற்றன.
சீன இராணுவம்
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி சீன கடற்படையின் 27 போர்க்கப்பல்கள் மற்றும் 62 விமானங்கள் அதன் எல்லைக்குள் காணப்பட்டுள்ளன.
தைவானின் புதிய அதிபராக லாய் சிங் தேவின்(William Lai Ching-te) பதவியேற்பு விழா முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது மே 20 அன்று சீனா தனது ராணுவப் பயிற்சியை ஆரம்பித்தது.
மே 23-24 அன்று நடைபெற்ற சீனாவின் இராணுவ ஒத்திகைக்கு Joint Sword - 2024A என்று பெயரிடப்பட்டடுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டும் தைவான் அருகே சீனா இதேபோன்று ராணுவ பயிற்சியை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |