இலங்கையின் யுத்தவெற்றி குறித்து மனம் திறந்த சீனா

sri lanka china war end
By Vanan Jan 14, 2022 01:08 PM GMT
Report

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியதாக சீனா தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கைக்கு உதவ ஏனைய நாடுகள் தயக்கம் காட்டினாலும், சீனா இலங்கைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து பல தசாப்தங்களாக நீடித்த போரை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக தெரிசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின்போது, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும், இலங்கையில் சீனாவுடன் போட்டிபோடும் இந்தியாவும் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாக சீனத் தூதுவர் கி செங்ஹோங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சீனா இரகசிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது என்ற பிரசாரத்தை நிராகரித்த சீன தூதுவர், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூன்று தீவுகளில் மின் உற்பத்தித் திட்டங்கள் இரத்துச் செய்யப்படுவதால் இலங்கை பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டு, சீன தனியார் துறையால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதற்கும் சீனத் தூதரகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கடன் நெருக்கடியை இலங்கை வெற்றிகொள்ளும் எனத் தான் நினைப்பதாகவும், இந்தச் சிரமங்கள் தற்காலிகமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்கு நீண்டகாலச் சலுகையாக அமையும் எனத் தெரிவித்துள்ள செங்ஹோங், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.       

ReeCha
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026