சீனாவுக்குள் ஊடுருவியது ஒமிக்ரோன்
china
omicron
case report
By Vanan
சீனாவில் முதல் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து சீனாவின் வடக்கு நகரமான தியான்ஜினுக்கு வருகை தந்த பயணி ஒருவருக்கே ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அறிகுறியற்ற அவருக்கு கடந்த வியாழன் அன்று கொவிட் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் படி, ஒமிக்ரோன் திரிபு அவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது குறித்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்