சீன ஆக்கிரமிப்பின் உச்சம்! யாழ்ப்பாணத்திலும் தமிழ் - சிங்களம் புறக்கணிப்பு
jaffna
sinhala
china-language
By Vanan
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள சீனாவின் அரச நிறுவனம் (China State Construction Engineering Corporation) ஒன்றில் பெயர்ப் பலகை மற்றும் கட்டட வெளிப்புறம் ஆகியவற்றில் சீன மற்றும் ஆங்கில மொழிளை மாத்திரம் பயன்படுத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
அலுவலகப் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளதோடு தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி பிரதான மொழியாக இருக்கும் பட்சத்தில், தமிழும் - சிங்களமும் இல்லாது தனியே சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் இங்கு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்