சீனாவின் மாஸ்டர் பிளான்! சிக்கியது ஸ்ரீலங்கா - கலக்கத்தில் இந்தியா
ஆசிய கண்டத்தில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபக்க்ஷ வழியாக சீனா செய்தது.
அதற்காக அவருக்கு தனிப்பட்ட ரீதியாக கொடுப்பட்ட கொடுப்பனவுகளுக்கான ஆதரங்கள் இன்னமும் அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் புலனாய்வு நிறுவனத்திடம் உள்ளது.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடமிருந்து ஸ்ரீலங்கா 307 மில்லியன் டொலரை கடன்தொகையாகப் பெறவேண்டுமாக இருந்தால் சீனாவின் கட்டுமாண பணி நிறுவனங்களை ஸ்ரீலங்கா ஏற்றுக் கொள்ள வேண்டும் என சீனா கட்டாயப்படுத்தியது.
கடன் என்ற பெயரில் உலக நாடுகளை சீனா தன்வசம் செய்துகொண்டுள்ளது. அப்படி சிக்கியது தான் ஸ்ரீலங்காவும்.
கடல் மார்க்கமாக கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய கேந்திர மையமாக ஸ்ரீலங்கா விளங்குகின்றது.
ஸ்ரீலங்கா மீது இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த போது சீனாவிடம் எப்போது எல்லாம் கடன் கேட்கின்றபோதும் இல்லை என்று மறுக்காமல் பணம் கொடுத்து வந்துள்ளது.
சீனாவின் ஆதிக்கம் தற்போது ஸ்ரீலங்காவில் வேரூன்றி நிற்கின்றது.
இது எல்லாம் சீனா இந்தியாவை தெற்குப்பகுதியால் தமிழ்நாட்டை தாக்குவதற்கு ராஜபக்க்ஷர்களை வைத்து வகுத்த திட்டமே,
Related video: