ஜப்பானின் முடிவால் - ஆசிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் "ட்ராகன்"
புகுஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து அதே ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவும் புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு பாரிய சேதத்தை உருவாக்கியதோடு அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட தொடங்கியிருக்கிறது.
ஒரு தசாப்தம் கடந்து இன்றும் கதிர்வீச்சு தாக்கங்கள்
இன்று ஒரு தசாப்தம் கடந்த நிலையிலும் அது பேசுபொருளாக இருப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை ஏனென்றால் அதன் கதிர்வீச்சு தாக்கங்கள் இன்றளவும் இருப்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும் .
இந்நிலையில் குறித்த அணுவுலையினை குளிர்விப்பதற்கும் சுத்திகரிப்பதற்கும் நீர் பயன்படுத்தப்பட்டது அந்த வகையில் இன்றளவும் சுமார் 1.17 மில்லியன் கன மீட்டர் அளவிலான அணு மாசு நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
இந்த மாசு நீரை சுத்திகரித்து பசுபிக் பெருங்கடலில் சேர்ப்பதற்கு ஜப்பானிய அரசு முடிவு செய்த நிலையில் ஐ.நா சபையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.ஆனால் இந்த முடிவினை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.
சேர்க்க கூடாது என்கிறது சீனா
குறித்த கழிவு நீரை கடலில் சேர்ப்பதால் பசுபிக் பெருங்கடலின் கடல்வளம் பாதிக்கப்படுவது மாத்திரமன்றி குறித்த கடற்பகுதியை சூழவுள்ள நாடுகளுக்கும் இது பாரிய விளைவுகளை ஏட்படுத்தக் கூடும் என்ற அச்சத்தில் சீன, தென்கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்நிலையில் குறித்த முடிவை தடுத்து நிறுத்த ஆதரவு கோரி ஆசிய நாடுகளிடம் சீனா உதவி கோரியுள்ளது. பொதுவாக ஆசிய நாடுகளிற்கு அழுத்தம் அளிக்கின்ற சீனா இன்று ஆசிய நாடுகளிடம் உதவி கோரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என உலக நடுகள் கருத்து தெரிவிக்கின்றன