சீனாவில் பாடசாலைக்குள் புகுந்த நபர் மாணவர்கள் மீது கத்திகுத்து தாக்குதல்
police
death
china
By Vasanth
சீனாவில் பாடசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக மாணவர்கள் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுட்டு வீழ்த்தினர்.
யுனான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள பள்ளிக் கூடத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர், கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தினார்.
அந்த நபர் சரணடைய மறுத்ததை அடுத்து, ‘சினைப்பர்’ என்று அழைக்கப்படும் தொலைவிலிருந்து குறிபார்த்து சுடுவதில் திறமைவாய்ந்த பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் தாக்குதல் நடத்திய நபரின் நெற்றிப் பொட்டில் சுட்டு வீழ்த்தினார். அந்த நபர் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த மாணவரையும் பொலிசார் மீட்டனர்.
தாக்குதல் நடத்தியவர் 56 வயதான வாங் என்பது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.
4ம் ஆண்டு நினைவஞ்சலி