அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு

Ampara Saudi Arabia Protest
By Farook Sihan Sep 20, 2026 01:56 PM GMT
Report

சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.  

சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

 எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை.

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு | Signature Campaign Demanding Anojans Release

இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் மெழுகுவர்த்தி போராட்டம் : அனைவரையும் அணிதிரள அழைப்பு

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் மெழுகுவர்த்தி போராட்டம் : அனைவரையும் அணிதிரள அழைப்பு

“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” 

 “ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு | Signature Campaign Demanding Anojans Release

அனோஜனுக்கு மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குங்கள் : ஹட்டனில் போராட்டம்

அனோஜனுக்கு மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குங்கள் : ஹட்டனில் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி