கொழும்பில் இடியுடன் கூடிய கனமழை...! வெள்ள நீரால் வீதிகள் முடக்கம்
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகப் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, மின்னியல் சமிக்ஞை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தொடருந்து சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
முக்கிய வீதிகள்
இந்தநிலையில் கொழும்பு நகர எல்லையிலுள்ள முக்கிய வீதிகள் பலவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்களைச் செலுத்துவதில் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்தோடு மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |