மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள சீனாவின் சனத்தொகை : வெளியான புள்ளி விபரம்
சீனாவின் சனத்தொகை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த நாட்டின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமை, நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஒரு குழந்தை திட்டம்
சீனாவில் சனத்தொகையை குறைப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டத்தால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் அந்த கொள்கையை சீன அரசாங்கம் தளர்த்தியது.
அதன் பின்னர், ஓரளவு அனுகூலம் ஏற்பட்டிருந்த போதிலும், பிறப்பு வீதம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை.
குறைவடைந்த மக்கள் தொகை
எவ்வாறாயினும், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை குறைவடைந்தது.
இதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 2 மில்லியனால் குறைவடைந்தது.
இதன்படி, சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்கள் உள்ளதாக தேசிய புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |