இலங்கையில் அதிகளவில் உயிரிழக்கும் யானைகள் : மனித நடவடிக்கைகளே காரணமென தெரிவிப்பு
இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் கம்பிகள் காரணமாக கடந்த ஆண்டில் சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பல்வேறு மனித நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டில் 474 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சுமார் 6 ஆயிரம் காட்டு யானைகள் இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள்
இந்த யானைகளை கொல்ல சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் செயல்கள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொது மக்களின் ஆதரவு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடமான கோரிக்கை
இதன்படி, வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |