ஜனாதிபதி ட்ரம்புக்கு சீனா காட்டமான பதிலடி
'வரி விதிப்பதாலோ, பொருளாதார தடை விதிப்பதாலோ போருக்கு தீர்வு காண முடியாது. அவை பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும்,'' என அதிபர் டிரம்புக்கு சீனா பதில் அளித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போர் முடியும் வரை சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரிகள் விதிப்பது உள்ளிட்ட ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விரிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப், 'நேட்டோ' நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பிற்கு பதில் அளித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி,
பொருளாதாரத் தடை நிலைமையை மேலும் சிக்கலாக்கும்
போர் பிரச்சனைகளை தீர்க்க வரி விதிப்பதும் பொருளாதாரத் தடை விதிப்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும். போர் பிரச்சனையை தீர்ப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது. நாங்கள் போர்களில் பங்கேற்கவோ, திட்டமிடவோ இல்லை.
அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது. சீனாவும், ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இருக்காமல், நண்பர்களாக இருக்க வேண்டும். என தெரிவித்து உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
