அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக்கு சீனா மீண்டும் அழைப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வரும் நிலையில் சீனா இந்த அழைப்பை விடுத்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,

“சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி விதிக்கப்படும் ஒருதலைப்பட்ச தடைகளை சீனா எதிர்க்கின்றது.
இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதும் அழுத்தம் கொடுக்கும் உத்திகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும்.
China opposes unilateral sanctions that lack basis in international law and UN Security Council mandate. Military force and pressure tactics will only lead to escalation that serves no one’s interests. We call on parties to act responsibly and solve disputes through dialogue and… pic.twitter.com/6Z1QfRadsj
— CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) August 21, 2026
இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு தரப்பினருக்கும் நன்மையை ஏற்படுத்தாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதியின் விமான நிலையம் - எண்ணெய் ஆலை மீது கடுமையான தாக்குதல்! மீண்டும் கொந்தளிப்பில் மத்திய கிழக்கு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |