ஆறு மணிநேர வாக்குமூலம்! நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறிய நாமல்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.
நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அவர் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் அந்த வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.
நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
வாக்குமூலம்
இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |