“சீனாவின் இராணுவத் தளமாக மாறப்போகும் இலங்கை” அமெரிக்காவுக்கு காட்டமான பதில் வழங்கிய சீனா
சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படலாமென அமெரிக்காவின் கருத்துக்கு சீன தூதரகம் பதில் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் அறிக்கைக்கு சீன தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
“அனைவரும் திருடுகிறார்கள் என ஒரு திருடன் நினைப்பதாக” அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா தற்போதைக்கு 750-க்கு மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ முகாம்களை ஸ்தாபித்துள்ளதை சீன தூதரகம் நினைவூட்டியுள்ளது.
2030ஆம் ஆண்டளவில் சீனாவின் அணுவாயுத எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்துக்கொள்ள முடியும் என பென்டகன் வெளியிட்ட அறிக்கைக்கு சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சீனாவில் அணுவாயுத அச்சுறுத்தலை அதிரிக்கப்பதற்கு அமெரிக்கா இந்த அறிக்கை ஊடாக முயற்சித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு எதிராக அணுவாயுதங்களை பயன்படுத்தாத எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் சீனா அணுவாயுத அச்சுறுத்தலை விடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.