நடுக்கடலில் சீனப் போர்க்கப்பல்களுக்கு சிறிலங்கா வழங்கும் உதவி - பல ஆதாரங்கள்; அதிருப்தியில் இந்தியா!
சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவின் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப சிறிலங்கா அனுமதித்தமைக்கு இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தமைக்கான பல ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீன போர்க்கப்பல்களுக்கு இந்தியா அல்லது அமெரிக்க தலையீடு இல்லாமல் எரிபொருள் நிரப்புவதற்கு சரியான தீர்வை வழங்குகிறது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோரிக்கை

இந்த விடயம் தொடர்பில் சிறிலங்கா கவனத்தில்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகள் சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக சீனப் போர்க்கப்பல்கள் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்தியாவும் அமெரிக்காவும், சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டில் சிறிலங்கா

பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி தேவைப்படுவதால், சிறிலங்கா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளமையும் இதற்கு காரணமாக அமைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.