சீனாவை பின்னுக்குத் தள்ளி முந்தியது ஸ்ரீலங்கா!
சீனாவில் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை விடவும் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. உலகில் முதன்முதலாக சீனாவிலேயே கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டது.
அந்நாட்டில் 90 ஆயிரத்து 106 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 4 ஆயிரத்து 636 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் இலங்கையில் சீனாவை விடவும் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனிடையே 93 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 9 ஆயிரத்து 358 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 6 ஆயிரத்து 832 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 8 இலட்சத்து 29 ஆயிரத்து 865 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.