மைத்திரிக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த தொழிலதிபர்கள்!
Maithripala Sirisena
Political Development
Current Political Scenario
By Shalini Balachandran
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) வீடுகள் வழங்க மூன்று தொழிலதிபர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், கொழும்பில் அவர்கள் வீடுகள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், மைத்திரிபால சிறிசேன இன்னும் அந்த வீடுகளை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது தற்போதைய உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து மிக விரைவில் வெளியேறுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த 16 ஆம் திகதி ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான கோரிக்கைகள் பல அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்