காசாவில் மனிதாபிமானப் பேரழிவு: தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸா சிட்டி மற்றும் மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள்
இந்தத் தாக்குதலில், 19 பெண்கள் மற்றும் சிறாா்கள் உள்பட 40 இற்கும் மேற்பட்டோா் உயிரிழந்துடன் 22 போ் படுகாயமடைந்துள்ளனர்.
ஹமாஸிடம் உள்ள இஸ்ரேல் (Israel) பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் தம்மிடம் ஹமாஸ் (Hamas) படை சரணடைய வேண்டும் என்று அழுத்தம் அளிக்கும் நோக்கில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடா்ந்து வரும் நிலையில், காஸா சிட்டியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு திசை நோக்கி நகா்ந்து தஞ்சமடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் வேதனை
இருப்பினும், இந்த நடவடிக்கை மக்களின் வேதனையை மேலும் அதிகரிக்கும் என்று தன்னாா்வ உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய போரை நிறுத்த வேண்டும் என்று அந்தக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த 23 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸாவில் 65,000 இற்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
