இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
சீனாவில் (china) இருந்து கொழும்புக்கு (colombo) நேரடி விமான சேவையினை சோங்கிங் ஏர்லைன்ஸ் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு (Bandaranaike International Airport) நேற்று (24.6.2024) பிற்பகல் 2:50 மணிக்கு இந்த விமானம் வந்தடைந்துள்ளது.
குறித்த தகவலை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை
இந்நிலையில், 78 பயணிகளுடன் வருகை தந்த இந்த விமானம் நீர் பீரங்கி வணக்கத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சியின் மூலம் பயணிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
சோங்கிங் மற்றும் கொழும்பு இடையே வாராந்திர மூன்று விமானங்கள் இயக்கப்படும் அதே வேளையில் Acorn Aviation (Private) Limited இலங்கையில் Chongqing Airlinesக்கான பொது விற்பனை முகவராக (GSA) உள்ளது.
இலங்கையில் சோங்கிங் ஏர்லைன்ஸ் (Chongqing Airlines) செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமானது, இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, நிதி, கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என AASL தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |