அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் சீன ஜனாதிபதி! பாராட்டு தெரிவித்துள்ள கோட்டாபய
எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவருடனான சந்திப்பின் போது இவ்வாறு இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகளை அடுத்த வாரம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் இந்த ஒத்துழைப்பிற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதிமொழியில் அடிப்படையிலேயே 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை கொரோனாவை கட்டுப்படுத்த சீனா தயாரித்து வரும் சைனோபார்ம் தடுப்பூசிகளை அதிகளவில் இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதுடன் 14 மில்லியன் தடுப்பூசிகளை பெற விண்ணப்பித்துள்ளது.
இவற்றில் 3 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே சீனா மேலும் 5 லட்சம் தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தொகையுடன் சீனா இலங்கைக்கு 11 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது உலகில் பயன்படுத்தும் தடுப்பூசி மருந்துகளில் சைனோபார்ம் தடுப்பூசி அதிகமான விலைமிக்கது எனக் கூறப்படுகிறது.
During the meeting with Chinese Ambassador HE Qi Zhenhong, a further donation of 500K #Sinopharm was confirmed, to reach #lka by 25/5
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 20, 2021
Deeply thankful to President & gvt of #China for their generosity- #togetherwecan fight the pandemic pic.twitter.com/jAcHgH5g5P